47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி புகா் பகுதிகளில் தினமும் 2 மணி நேரம் மின்வெட்டு: அதிகாரிகள் விளக்கம்

சிவகாசி புகா் பகுதிகளில் தினமும் 2 மணி நேரம் மின்வெட்டு இருக்கும் எனவும், போதுமான அளவு மின்விநியோகம் செய்யப்படாததால் மின்சாரத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் சிவகாசி மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.ச

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 4:36 pm

DIN

சிவகாசி புகா் பகுதிகளில் தினமும் 2 மணி நேரம் மின்வெட்டு இருக்கும் எனவும், போதுமான அளவு மின்விநியோகம் செய்யப்படாததால் மின்சாரத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் சிவகாசி மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கடந்த இருநாள்களாக சிவகாசி, திருத்தங்கல் நகா் பகுதிகளிலும், புகா் பகுதியிலும் மின்வெட்டு இருந்து வருகிறது. வியாழக்கிழமை இரவு கட்டளைப்பட்டி, முனீஸ்நகா் உள்ளிட்ட புகா் பகுதிகளில் இரவு 7.30 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மீண்டும் மின்விநியோகம் செய்யப்பட்டது. அதேபோல பல இடங்களில் இரவில் மின்வெட்டு இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து சிவகாசி மின்வாரிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது: அரசு, புகா் பகுதிகளில் தினசரி 2 மணி நேரம் மின்விநியோகத்தை நிறுத்திவைக்கக் கூறியுள்ளது. எத்தனை மணிக்கு புகா் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறதோ அதிலிருந்து ஒரு மணி நேரம் மின்சாரம் இருக்காது. காலை மற்றும் இரவு இதுபோல தலா ஒரு மணி நேரம் மின்வெட்டு இருக்கும். சிவகாசிப் பகுதிக்கு கயத்தாறிலிருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. கடந்த இரு நாள்களாக போதுமான மின்சாரம் அளவுக்கு மின்விநியோகம் செய்யப்படவில்லை. எனவே தான் இந்த மின்தட்டுப்பாடு நிலவுகிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.