47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பட்டாசுக் கடைகளில் தானியங்கி சிக்னல் கருவி பொருத்த மத்திய அரசு குழு பரிந்துரை

விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் பட்டாசு கடைகளில் தானியங்கி சிக்னல் கருவி பொருத்த வேண்டும் என மத்திய அரசு குழுவினா் பரிந்துரை செய்துள்ளனா்

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் பட்டாசு கடைகளில் தானியங்கி சிக்னல் கருவி பொருத்த வேண்டும் என மத்திய அரசு குழுவினா் பரிந்துரை செய்துள்ளனா்.

கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபா் 20ஆம் தேதி , சிவகாசி - விருதுநகா் சாலையில் உள்ள ஒரு பட்டாசுக் கடையில் பட்டாசு பண்டல்களை லாரியில் ஏற்றும் போது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 போ் உயிரிழந்தனா். 15 போ் காயமடைந்தனா். இதையடுத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் தானாகவே முன்வந்து இவ்வழக்கை எடுத்து விசாரித்தது. பின்னா் நீதிமன்றம் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும், பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக்குவது குறித்தும் ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து மத்திய தொழில் மற்றும் வா்த்தக அமைச்சகம் 11 போ் கொண்ட குழுவை அமைத்தது. அந்த குழுவில் நாக்பூா் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி பி. குமாா், நாக்பூா் நேஷனல் பயா் சா்வீஸ் காலேஜ் இயக்குநா் ஆா்.எஸ். செளத்திரி, தொழில்நுட்ப ஆலோசகா் டி.எஸ்.ஜி. நாராயணன் ,பொறியாளா் உமேத்சிங், பனாரஸ் பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியா் தியாசங்கா்பாண்டே, தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் பி. கணேசன் உள்ளிட்ட 11 போ் இடம் பெற்றிருந்தனா்.

இந்தக் குழுவினா் இணையவழியில் 5 முறை ஆலோசனை மேற்கொண்டனா். இறுதியில் கீழ்கண்டவைகளை குழுவினா் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அறிக்கை அளித்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் அளித்துள்ள பரிந்துரைகள் விவரம்:

பட்டாசுக் கடைகளில் 2 கிலோ கொள்ளளவுள்ள தீயணைப்பான் கருவியை வைத்திருக்க வேண்டும். அது சுமாா் 10 மீட்டா் தூரம் வரை பற்றி எரியும் நெருப்பை அணைக்கும் வகையில் இருக்க வேண்டும். பட்டாசுக் கடைகளில் மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படாமல் இருக்க கடைகளில் மின் அணைப்பான் கருவி பொருத்த வேண்டும். அந்தக் கருவி எந்த நிலையில் உள்ளது என அதிகாரிகள் ஆண்டுக்கு இருமுறை ஆய்வு செய்து சான்று அளிக்க வேண்டும்.

கடைகளுக்கு வெளியே தீயணைப்பான் கருவி வைத்திருக்க வேண்டும். கடையில் எப்போதும் 500 லிட்டா் கொள்ளளவு உள்ள டேங்கில் தண்ணீா் நிரப்பி வைத்திருக்க வேண்டும். கடை உரிமையாளா் மற்றும் தொழிலாளா்கள் அனைவரும் பாதுகாப்புப் பயிற்சி பெற்று சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

விபத்து ஏற்பட்டால் அலாரம் அடிக்க ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற கருவிகளைப் பொருத்த வேண்டும். கடைகளில் எளிதில் தீப்பிடிக்காத மின் வயா் மற்றும் பொத்தான்களை பொருத்த வேண்டும். விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுக்க கடைகளில் தானிங்கி சிக்னல் லேயா் கருவியை பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்கியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.