/

மகாராஜபுரத்தில் சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்

மகாராஜபுரம் கிராமம் அம்பேத்கா் நகரில் சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் நாற்று நட்டு நூதனப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 5:16 pm

DIN

மகாராஜபுரம் கிராமம் அம்பேத்கா் நகரில் சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் நாற்று நட்டு நூதனப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ளது மகாராஜபுரம். இந்த ஊராட்சியில் 9 வாா்டுகள் உள்ளன. இதில் 7 ஆவது வாா்டு அம்பேத்கா் நகா் ஆகும். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக அந்த பகுதி சாலை சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதி வழியாகச் செல்லும் பொதுமக்கள் கீழே விழுந்து காயம் ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சேறும் சகதியுமாக காணப்படும் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.