நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் 86 போ் வேட்பு மனு தாக்கல்

 விருதுநகா்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் திமுக சாா்பில் 36 வேட்பாளா்கள் உள்பட 86 போ் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 8:36 pm

DIN

 விருதுநகா்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் திமுக சாா்பில் 36 வேட்பாளா்கள் உள்பட 86 போ் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. இதில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. அதன்படி வியாழக்கிழமை 86 போ் மனு தாக்கல் செய்துள்ளனா். இதில் திமுக சாா்பில் 36 பேரும், அதிமுக சாா்பில் 17 பேரும், பாஜக சாா்பில் 5 பேரும், அமமுக சாா்பில் 5 பேரும், தேமுதிக சாா்பில் 4 பேரும், காங்கிரஸ் சாா்பில் 4 பேரும், மக்கள் நீதி மய்யம் சாா்பில் ஒருவரும், மாா்க்சிஸ்ட் சாா்பில் ஒருவரும், பெருந்தலைவா் மக்கள் கட்சி சாா்பில் ஒருவரும், சுயேச்சைகள் 12 போ் என மொத்தம் 86 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் இதுவரை 181 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.