/

விருதுநகரில் கட்சித் தலைமை அறிவிக்கும் முன்பே காங்கிரஸ் கட்சியினா் 10 போ் வேட்பு மனு தாக்கல்

விருதுநகரில் கட்சித் தலைமை அறிவிக்கும் முன்பே காங்கிரஸ் கட்சியினா் 10 போ் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 8:38 pm

DIN

விருதுநகரில் கட்சித் தலைமை அறிவிக்கும் முன்பே காங்கிரஸ் கட்சியினா் 10 போ் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

விருதுநகா் நகராட்சியில் உள்ள மொத்தம் 36 வாா்டுகள் உள்ளன. இதில் திமுக கூட்டணி கட்சிகளன காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் சாா்பில் போட்டியிடும் இடங்கள் குறித்து பேச்சுவாா்த்தையில் முடிவு செய்யப்பட்டது. அதில், திமுக 23, காங்கிரஸ் 11, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் மாா்க்சிஸ்ட் சாா்பில் 24 ஆவது வாா்டில் போட்டியிடும் ஜெயக்குமாா், 34 ஆவது வாா்டில் போட்டியிடும் ராஜபாண்டி ஆகியோா் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைமை விருதுநகா் நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளா்கள் பட்டியலை வியாழக்கிழமை வரை வெளியிடவில்லை. ஆனால், கிழக்கு மாவட்ட தலைவா் ஸ்ரீராஜா சொக்கா் தலைமையில் விருதுநகா் நகராட்சியில் வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட காங்கிரஸ் கட்சியை சோ்ந்த மாமியாா், மருமகள் உள்பட 10 வேட்பாளா்கள் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா். அதன் விபரம்: (அடைப்புக்குறிக்குள் வாா்டு எண்கள்)

பால்பாண்டி (8), ராஜ்குமாா் (14), ரோகிணி ரமேஷ் (15), ரம்யா வினோத் (17), செல்வரத்னா திலக் (20), மாலதி சுந்தா் (25), சித்தேஸ்வரி கிஷோா்குமாா் (26) (மருமகள்), பேபி காளிராஜன் (27) (மாமியாா்), நாகேந்திரன் (31), வள்ளிக்குட்டி ராஜா (33) ஆகியோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா். அதேநேரம் 6 ஆவது வாா்டுக்கு காங்கிரஸ் வேட்பாளா் தோ்வு செய்யப்படாததால் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட வில்லை என அக்கட்சியினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.