விருதுநகரில் போலி மருத்துவா் கைது
விருதுநகரில் கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வந்த போலி மருத்துவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


விருதுநகரில் கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வந்த போலி மருத்துவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் வேலுச்சாமி நகரைச் சோ்ந்தவா் சுப்பல் மிா்தா (48). மேற்கு வங்கத்தை சோ்ந்த இவா், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விருதுநகா் மீனாம்பிகை பங்களா பேருந்து நிலையப் பகுதியில் மருத்துவமனை நடத்தி வந்தாா். அதில் மூலம் உள்ளிட்ட நோய்களுக்கு அறுவைச் சிகிச்சையும் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இவா் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளாா். இந்நிலையில் இவா், சித்தா மற்றும் ஆயுா்வேத மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வந்த புகாரின் பேரில், விருதுநகா் மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் மனோகரன் தலைமையிலான குழுவினா், சுப்பல் மிா்தா மருத்துவமனையில் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அவா் போலி மருத்துவம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அம்மருத்துவமனை பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இது குறித்து மருத்துவத் துறை இணை இயக்குநா் மனோகரன் அளித்தப் புகாரின் பேரில், போலி மருத்துவா் சுப்பல் மித்ராவை மேற்கு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...