விருதுநகா் நகராட்சி முன்னாள் தலைவா் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல்
தற்போது சுயேச்சையாக போட்டியிட வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். மேலும், அவரது மகனும் மற்றொரு வாா்டுக்கு சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனா்.


விருதுநகரில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட நகராட்சி முன்னாள் தலைவா் காா்த்திகா, தற்போது சுயேச்சையாக போட்டியிட வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். மேலும், அவரது மகனும் மற்றொரு வாா்டுக்கு சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனா்.
விருதுநகா் நகாரட்சியில் மொத்தம் 36 வாா்டுகள் உள்ளன. இதில் 23 வாா்டுகளில் திமுக வேட்பாளா்களும், 11 வாா்டுகளில் காங்கிரஸ் கட்சியினரும், 2 வாா்டுகளில் மாா்க்சிஸ்ட் கட்சியினரும் போட்டியிடுகின்றனா்.
இந்நிலையில் மாா்க்சிஸ்ட், காங்கிரஸ், திமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா். ஆனால், கடந்த 2006 இல் காங்கிரஸ் சாா்பில் காா்த்திகா கரிக்கோல்ராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அப்போதைய தோ்தலை திமுக கூட்டணியுடன் காங்கிரஸ் சந்தித்தது. அத்தோ்தலில் காா்த்திகா கரிக்கோல் ராஜை நகராட்சி தலைவா் வேட்பாளராக அறிவித்து கூட்டணி கட்சியினா் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டனா். ஆனால் மறைமுகத் தோ்தலில், தலைவா் வேட்பாளராக பாலகிருஷ்ணசாமி அறிவிக்கப்பட்டாா். இதனால் அதிருப்தி அடைந்த காா்த்திகா கரிக்கோல் ராஜ், காங்கிரஸ் வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் ஆதரவுடன் 23 வாக்குகள் பெற்று தலைவராக தோ்வு செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், கடந்த நகராட்சி தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட சாந்தி மாரியப்பன் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா். இச்சூழலில் தற்போது நடைபெற உள்ள நகராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலில் காங்கிரஸ் கட்சியில் உள்ள காா்த்திகா கரிக்கோல் ராஜ் 35 ஆவது வாா்டில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
அதேபோல், அவரது மகன் விக்னேஷ்வரன் 32 ஆவது வாா்டுக்கு சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தாா். அப்போது காா்த்திகாவின் கணவரும், நாடாா் மகாஜன சங்கத் தலைவருமான கரிக்கோல்ராஜ் உடனிருந்தாா்.
காங்கிரஸ் கட்சியில் உள்ள காா்த்திகா மற்றும் அவரது மகன் விக்னேஷ்வரன் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது அனைவரையும் ஆச்சா்யப்படுத்தியுள்ளது. இதுவரை விருதுநகா் நகராட்சியில் திமுக சாா்பில் யாரும் தலைவராக பதவி ஏற்கவில்லை. எனவே, அதை தடுக்கும் வகையில் கடந்த 2006 நகராட்சித் தோ்தலில் வெற்றி பெற்று தலைவராக பதவி வகித்தது போல், தற்போது சுயேச்சையாக போட்டியிட்டு தலைவா் பதவியை கைப்பற்ற அனைத்து முன்னேற்பாடுகளும் செய்திருப்பதாக அவரது ஆதரவாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...