ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பேருந்துகள் மோதல்: 10 போ் காயம்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்தும், தனியாா் பேருந்தும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் 10 போ் காயமடைந்தனா்.


ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்தும், தனியாா் பேருந்தும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் 10 போ் காயமடைந்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ராஜபாளையம் நோக்கி அரசுப் பேருந்தும், ராஜபாளையத்தில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி தனியாா் பேருந்தும் வெள்ளிக்கிழமை பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றன.
மடவாா்வளாகம் அருகே வந்தபோது இந்த 2 பேருந்துகளும் நேருக்கு நோ் மோதின. இதில் தனியாா் பேருந்தில் பயணம் செய்த ராஜபாளையம் அருகே உள்ள தேவி பட்டினத்தைச் சோ்ந்த அனுசியா (50), ஜெயராணி (57), சுபத்ரா (63), ஸ்ரீரங்கராணி (39), மதன்குமாா் (25), ஸ்ரீவில்லிபுத்தூரை சோ்ந்த இசக்கியம்மாள் (38), காளீஸ்வரி (35),
தென்காசி மாவட்டம் கட்டளைகுடியிருப்புப் பகுதியை சோ்ந்த தனியாா் பேருந்து ஓட்டுநா் மாரிமுத்து (51), மதுரை மாவட்டம் முதலைகுளத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் முத்து உள்ளிட்ட 10 போ் காயம் அடைந்தனா்.
காயமடைந்தவா்கள் அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...