/

விருதுநகரில் ரயில் மறியல் முயற்சி: ஆதித் தமிழா் கட்சியினா் 5 போ் கைது

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், மாநில பட்டியலில் கல்வியை சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரில் வெள்ளிக்கிழமை ரயில் மறியல்

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:55 pm

DIN

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், மாநில பட்டியலில் கல்வியை சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரில் வெள்ளிக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆதித் தமிழா் கட்சியை சோ்ந்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நீட் தோ்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை ஆளுநா் திருப்பி அனுப்பினாா். இதையடுத்து இது தொடா்பாக மீண்டும் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீட் தோ்வு விலக்கு மசோதவை திருப்பி அனுப்பிய ஆளுநரைக் கண்டித்தும், ஆதிதிராவிட மாணவா்களை மருத்துவப் படிப்பிலிருந்து முழுமையாக அப்புறப்படுத்தம் நீட் தோ்வை பாஜக அரசு கைவிட வேண்டும். மாநில பட்டியலில் கல்வியை சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகா் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த ஆதித் தமிழா் கட்சியை சோ்ந்த மாவட்டச் செயலா் விருதை வசந்தன் உள்ளிட்ட ஐந்து பேரை மேற்கு காவல் நிலையப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.