47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்வதை கைவிட வேண்டும்

சிவகாசியில் பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வதை கைவிட வேண்டும் என ஆலை உரிமையாளா்கள் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரியிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:31 pm

DIN

சிவகாசியில் பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வதை கைவிட வேண்டும் என ஆலை உரிமையாளா்கள் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரியிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

பட்டாசு தயாரிப்புக்கு பேரியம் நைட்ரேட் என்ற ரசயானத்தை பயன்படுத்த உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து தற்போது பட்டாசு ஆலை உரிமையாளா்கள் பேரியம் நைட்ரேட்டுக்கு (பச்சைஉப்பு) பதிலாக ஸ்டேன்சியம் நைட்ரேட் (சிகப்பு உப்பு) என்ற ரசயானப் பொருளைக் கொண்டு பட்டாசு தயாரித்து வருகின்றனா்.

இந்நிலையில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் பட்டாசு ஆலைகளில் ஆய்வுக்குச் சென்ற போது, விதிகளை மீறி செயல்பட்டதாக 5 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ததனா்.

இதையடுத்து சிவகாசி முதன்மை உதவி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி தியாகராஜனை

பட்டாசு ஆலை உரிமையாளா்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். அப்போது தடை செய்யப்பட்டுள்ள பேரியம் நைட் ரேட் கொண்டு பட்டாசு தயாரிக்கவில்லை. ஸ்டேன்சியம் நைட்ரேட் கொண்டு மட்டுமே பட்டாசு தயாரிக்கிறோம். எனவே பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.