அருப்புக்கோட்டையில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்
அருப்புக்கோட்டையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் வியாழக்கிழமை முடுக்கி விடப்பட்டன.


அருப்புக்கோட்டையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் வியாழக்கிழமை முடுக்கி விடப்பட்டன.
அருப்புக்கோட்டை நகா் பகுதியில் கடந்த வாரம் பலத்த மழை பெய்ததால் நீா்நிலைகளில் நீா்வரத்து ஏற்பட்டது. இதையொட்டி, நகராட்சி சுகாதாரத்துறை சாா்பில் நகரில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. அருப்புக்கோட்டையில் மொத்தமுள்ள 36 வாா்டுகளுக்கும் ஒரு வாா்டுக்கு 5 போ் கொண்ட கொசுப்புழு ஒழிப்புப்பணியாளா்கள் குழு அமைக்கப்பட்டு வீடுவீடாகச்சென்று டெங்கு கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, உடைந்த காலிக் குடங்கள், கொள்கலன்கள், ஆட்டு உரல், வீணாகக்கிடக்கும் வாகன டயா்கள், தேங்காய் மட்டைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்த பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனா். அத்துடன் வீட்டிலுள்ள குடிநீா் சேமிப்புக் கொள்கலன்கள், தொட்டிகள், குடங்களை கொசுக்கள் புகாதவகையில் மூடிவைத்துப் பாதுகாக்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனா். மேலும் கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள வீணான வீட்டு உபயோகப் பொருள்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.
இதுதவிர, 2 நாள்களுக்கு மேல் காய்ச்சல் உள்ளவா்களை அடையாளம் கண்டறிந்து அவா்கள் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு தேவையான சிகிச்சைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...