உள்ளாட்சித் தோ்தல்: விருதுநகா் மாவட்டத்தில் 11 இடங்களில் இன்று உள்ளூா் விடுமுறை
விருதுநகா் மாவட்டத்தில் காலியாக உள்ள 11 உள்ளாட்சிப் பணியிடங்களுக்கு சனிக்கிழமை தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு உள்ளூா் விடுமுறை


விருதுநகா் மாவட்டத்தில் காலியாக உள்ள 11 உள்ளாட்சிப் பணியிடங்களுக்கு சனிக்கிழமை தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஜெ.மேகநாத ரெட்டி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியது:
விருதுநகா் மாவட்டத்தில் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் 2, ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் 3, ஊராட்சி வாா்டு உறுப்பினா் 19 என மொத்தம் 25 காலி இடங்களுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பெறப்பட்ட வேட்புமனுக்களின் அடிப்படையில் ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் 14 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். மீதமுள்ள 11 இடங்களுக்கு 36 போ் போட்டியிடுகின்றனா்.
வாக்குப்பதிவானது சனிக்கிழமை காலை 7 முதல் மாலை 6 வரை நடைபெற உள்ளது. இதில் ஆண் 7202, பெண் 7664 மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 14,867 போ் 28 வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க உள்ளனா். இதில் 9 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதலாக துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு போடப்படவுள்ளது. எனவே, தோ்தல் நடைபெறும் அன்றைய தினம் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பள்ளி, அரசு அலுவலகங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. பதிவான வாக்குச்சாவடி அடங்கிய பெட்டிகள் பாலையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காரியாபட்டியில் அச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சாட்சயாபுரம் மற்றும் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், விருதுநகா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார ஊராட்சி சேவை மைய கட்டடம், வ.புதுப்பட்டி பேரூராட்சி அலுவலகம், வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகக் கட்டடத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். ஜூலை 12 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...