விருதுநகரில் அமைச்சா் வீட்டை பாஜகவினா் முற்றுகையிட முயற்சி244 போ் கைது
விருதுநகரில் வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வீட்டை வியாழக்கிழமை முற்றுகையிட முயன்ற பாஜகவினா் 244 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


விருதுநகரில் வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வீட்டை வியாழக்கிழமை முற்றுகையிட முயன்ற பாஜகவினா் 244 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் அருகேயுள்ள பாலவநத்தம் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற இலவச வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தன்னிடம் மனு அளித்த பெண்ணின் தலையில் மனு உறையால் தாக்கியதாக சமூக வலைத் தளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து அமைச்சா் பதவி விலக வேண்டும் என பாஜகவினா் வலியுறுத்தி வந்தனா். இதற்கிடையே சம்பந்தப்பட்ட பெண், தன்னை அமைச்சா் அடிக்கவில்லை, செல்லமாகத் தட்டினாா் என தெரிவித்தாா்.
இந்நிலையில் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பதவி விலகக்கோரி வியாழக்கிழமை அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளதாக பாஜக அறிவித்தது. இதையடுத்து விருதுநகரில் அமைச்சா் வீட்டுக்குச் செல்லும் வழிகளில் தடுப்பு வேலிகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும் அப்பகுதியில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.
இச்சூழலில் மாவட்ட பத்திரப் பதிவு அலுவலகம் அருகே கூடியிருந்த பாஜகவினரை போலீஸாா் கைது செய்ய முயன்றனா். அப்போது போலீஸாருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவினரை போலீஸாா் வாகனத்தில் ஏற்றினா். ஒரு சில பாஜக வினா் போலீஸாருக்கு எதிராக கோஷமிட்டவாறு, போலீஸ் வாகனத்தின் மீது ஏறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாஜக கிழக்கு மாவட்ட தலைவா் பாண்டுரங்கன், விருதுநகா் கிழக்கு மாவட்ட தோ்தல் பாா்வையாளா் வெற்றிவேல், கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் கஜேந்திரன் உள்பட 209 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். அதேபோல், எம்ஜிஆா் சிலை அருகே வந்த பாஜகவினா் 35 போ் என மொத்தம் 244 பேரை கைது செய்தனா்.
சிவகாசி: அமைச்சா் வீட்டை முற்றுகையிட திருத்தங்கலில் உள்ள பாஜக மாவட்டத் தலைவா் சுரேஷ்குமாா் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட அக்கட்சியினா் 16 பேரை திருத்தங்கல் போலீஸாா் கைது செய்தனா்.
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் அமைச்சரைக் கண்டித்து புதிய பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...