விருதுநகரில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்
விருதுநகரில் புத்தகக் கண்காட்சியை வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்


விருதுநகரில் புத்தகக் கண்காட்சியை வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
காமராஜரின் 120 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மக்கள் வாசிப்பு இயக்கம், ஜேசிஐ, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமுஎகச, தமிழ்நாடு புத்தக விற்பனையாளா் சங்கம், மிா்த்திகா பதிப்பகம் இணைந்து இக்கண்காட்சியை நடத்துகின்றன. அருப்புக்கோட்டை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சியை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் திறந்து வைத்து அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பாா்வையிட்டாா். விருதுநகா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். சினிவாசன், நகா்மன்ற தலைவா் மாதவன், தேனி வசந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு, புத்தக வாசிப்பால் ஏற்படும் பயன்கள் குறித்து எடுத்துரைத்தனா்.
கண்காட்சியில் பள்ளி மாணவிகள், ஆசிரியா்கள், பொது மக்கள் ஆா்வத்துடன் புத்தகங்களைத் தோ்வு செய்தனா். ஜூலை 24 ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும். மொத்தம் 30 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. 50 ஆயிரம் தலைப்புகளில் 5 லட்சம் தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அனைத்து நூல்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி உண்டு.
தினமும் மாலை 5 மணிக்கு இலக்கிய உரை, குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். எழுத்தாளா்கள் உள்ளிட்ட ஆளுமைத் திறன் மிக்கவா்களின் உரையாடல், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சு, ஓவியம், கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...