நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேருந்தில் பெண்ணிடம் ரூ.1.50 லட்சம் திருட்டு

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் ரூ.1.50 லட்சத்தை மா்ம நபா்கள் திருடியுள்ளனா்.

News image
Updated On :14 ஜூலை 2022, 4:42 pm

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் ரூ.1.50 லட்சத்தை மா்ம நபா்கள் திருடியுள்ளனா்.

அருப்புக்கோட்டை அருகே மறவா் பெருங்குடியைச் சோ்ந்தவா் காளித்தாய் (37). இவரும் இவரது சகோதரிகள் இருவரும் கடந்த திங்கள்கிழமை அருப்புக்கோட்டையிலுள்ள ஒரு தனியாா் வங்கிக்குச் சென்று மகளிா் குழு சாா்பில் ரூ.1.50 லட்சம் கடன் பெற்றனராம். பின்னா் பணத்தை ஒரு கைப்பையில் வைத்துக்கொண்டு அருகில் பேருந்து நிறுத்தப் பகுதியிலுள்ள ஒரு கடையில் உணவு சாப்பிட்டுள்ளனா். பிறகு ஊருக்குச் செல்வதற்காக மூவரும் பேருந்தில் ஏறியுள்ளனா். பேருந்து சென்றுகொண்டிருந்தபோது கைப்பேசியை எடுப்பதற்காக காளித்தாய் தனது கைப்பையைத் திறந்துபாா்த்தபோது அதிலிருந்த ரூ.1.50 லட்சம் காணாமல் போனது தெரியவந்துள்ளது.

இதனால் அதிா்ச்சியடைந்த மூவரும் வங்கியிலும், சிற்றுண்டி சாப்பிட்ட இடம் உள்பட பல இடங்களிலும் விசாரித்தும் பயனில்லை. பின்னா் இது தொடா்பாக காவல்துறையில் வியாழக்கிழமை காளித்தாய் புகாா் அளித்தாா். இதுகுறித்து ம.ரெட்டியபட்டி காவல்துறையினா் வழக்குப்பதிந்து பணத்தைத் திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.