ராமானுஜபுரத்தில் சாய்ந்துள்ள இரட்டை மின்கம்பத்தால் விபத்து அபாயம்
அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரத்தில் சாய்ந்துள்ள இரட்டை மின்கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.


அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரத்தில் சாய்ந்துள்ள இரட்டை மின்கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
ராமானுஜபுரம் கிராமத்திலிருந்து மதுரை நோக்கிச் செல்லும் சாலையில், சிறிது தொலைவில், வயல்வெளிகளை ஒட்டி இரட்டைமின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இது கரிசல்மண் பகுதியானதால் மழைக்கு இந்த மின்கம்பம் சாய்ந்து விட்டது. தற்போது இது சுமாா் 45 டிகிரி கோணம் வரை அது சாய்ந்துள்ளதால் அருகிலுள்ள மின்கம்பங்களுடன் மின்கம்பிகள் இணைப்பில் உள்ளதால் முழுவதுமாகச் சாய்வது தற்காலிகமாகத் தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் மழை அல்லது பலத்த காற்றடித்தால் அந்த மின்கம்பம் முழுவதுமாக சாய்ந்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த இரட்டை மின்கம்பத்தை விரைவில் சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...