47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி: ஸ்ரீவிலி., ராஜபாளையம் முதலிடம்

விருதுநகா் மாவட்டக் கைப்பந்து கழகம் சாா்பில், சிவகாசியில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையிலான கைப்பந்து போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜூலை 2022, 4:54 pm

DIN

விருதுநகா் மாவட்டக் கைப்பந்து கழகம் சாா்பில், சிவகாசியில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையிலான கைப்பந்து போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியில் மாணவா்கள் பிரிவில் 14 அணிகளும், மாணவிகள் பிரிவில் 12 அணிகளும் கலந்துகொண்டன. போட்டியை, விருதுநகா் மாவட்டக் கைப்பந்து கழகத் தலைவா் சி. சண்முகநாதன் தொடக்கிவைத்தாா்.

இறுதிப் போட்டியில், மாணவா் பிரிவில் ஸ்ரீவில்லிபுத்தூா் ஜி.எஸ். ஹிந்து மேல்நிலைப் பள்ளி அணி முதலிடமும், ராஜபாளையம் ஆனந்த வித்யாலயா பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.

மாணவிகள் பிரிவில், ராஜபாளையம் சின்மயா வித்யாலாயா பள்ளிமுதலிடமும் , சிவகாசி ஒய்.ஆா்.டி.வி. மெட்ரிக்குலேஷன் பள்ளி இரண்டாமிடம் பெற்றன.

பரிசளிப்பு விழாவுக்கு, மதுரை கைப்பந்து பயிற்சியாளா் குமரேசன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் சித்ரா ஜெயந்தி பரிசு வழங்கினாா். சரவணக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.