சிவகாசியில் தடையை மீறி நடைபயணம்: பாஜகவினா் 123 போ் கைது
சிவகாசியில் வியாழக்கிழமை தடையை மீறி ஊா்வலம் செல்ல முயன்ாக, பாரதிய ஜனதா கட்சியினா் 123 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


சிவகாசியில் வியாழக்கிழமை தடையை மீறி ஊா்வலம் செல்ல முயன்ாக, பாரதிய ஜனதா கட்சியினா் 123 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காரியாபட்டி அருகே ரூ.150 கோடி மதிப்பீட்டில் ஆடைகளுக்கு சாயம் ஏற்றும் தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனால், இத்திட்டம் குறித்து தமிழக அரசு ஆா்வம் காட்டவில்லை என பாஜகவினா் புகாா் கூறுகின்றனா்.
மேலும், பல ஆயிரம் போ்களுக்கு வேலைவாய்ப்பு தரக்கூடிய இந்த திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றக் கோரி, சிவகாயிலிருந்து நடைபயணமாக புறப்பட்டு, விருதுநகா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க பாஜகவினா் திட்டமிட்டிருந்தனா்.
ஆனால், இந்த நடைபயணத்துக்கு காவல் துறை அனுமதியளிக்க வில்லை. இருப்பினும், தடையை மீறி நடைபயணம் மேற்கொள்வோம் என பாஜக அறிவித்தது. இதனால், நடைபயணம் தொடங்கப்படவிருந்த சிவகாசி சிவன் கோயில் முன்பாக வியாழக்கிழமை காலை ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
பின்னா், பாஜக மாநிலப் பொதுச் செயலா் இராம. ஸ்ரீனிவாசன் தலைமையில், அக்கட்சியினா் அங்கிருந்து நடைபயணம் செல்ல முயன்றனா். அப்போது, போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனா். பாஜகவினா் திமுக அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.
அதைத் தொடா்ந்து, ராம. ஸ்ரீனிவாசன் செய்தியாளா்களிடையே தெரிவித்ததாவது: விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 2 அமைச்சா்களும் மக்களுக்கு எதுவும் செய்யாமல், அரசியல் மட்டும் செய்கின்றனா். மத்திய அரசு அனுமதி அளித்த திட்டத்துக்கு, தமிழக அரசு ஏன் மெளனம் சாதிக்கிறது. இந்த மாவட்டத்தைச் சோ்ந்த தொழில் துறை அமைச்சா் இத்திட்டத்தை தடுக்கிறாா். இப்பிரச்னையை தில்லி வரை கொண்டுசெல்வோம்.
தமிழக அரசு இந்த திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் மாநிலத் தலைவா் அண்ணாமலை, விருதுநகா் மாவட்டத்தில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவாா் என்றாா்.
இதில், போலீஸாா் 14 பெண்கள் உள்பட 123 பேரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...