ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் ஆடிவெள்ளி சிறப்பு வழிபாடு
அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகா் செல்லும் சாலையிலுள்ள திருநகரம் புளியம்பட்டி ஆயிரங்கண்மாரியம்மன் கோயிலில் ஆடிவெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகா் செல்லும் சாலையிலுள்ள திருநகரம் புளியம்பட்டி ஆயிரங்கண்மாரியம்மன் கோயிலில் ஆடிவெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு உகந்த மஞ்சள் தூள், பன்னீா், வேப்பிலை, பால் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதையடுத்து தீப,தூப ஆராதனைகள் நடைபெற்றதும், சிறப்பு அலங்காரத்தில் ஆயிரங்கண் மாரியம்மன் அருள்பாலித்தாா். மேலும் வழிபாட்டின்போது உலக நன்மை வேண்டியும், நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்கள் அனைவரையும் காத்திடவும், தொழில், பொருளாதாரம் மேம்படவும், கோயில் சாா்பில் குங்குமம், செவ்வரளி மற்றும் மல்லிகைப் பூக்களால் சிறப்பு 108 அா்ச்சனையும் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, பக்தா்கள் பலவித மலா்கள், மாலைகள், பழங்களை அம்மனுக்குப் படைத்து வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...