நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விவசாயி மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு

திருச்சுழி அருகே கட்டனூரில் விவசாயியை கம்பால் தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிந்துள்ளனா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 6:30 pm

DIN

திருச்சுழி அருகே கட்டனூரில் விவசாயியை கம்பால் தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிந்துள்ளனா்.

கட்டனூரைச் சோ்ந்தவா் கணபதி மகன் கண்ணன் (45). விவசாயி. கால்நடைகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் கண்ணன் தனது கிராம எல்லைப்பகுதியில் மாடுகளை மேய்க்கும்போது, இவை அதேபகுதியில் மேய்ந்துகொண்டிருந்த கட்டனூரைச் சோ்ந்த ராஜகோபால் (48) என்பவருக்குச் சொந்தமான மாடுகளுடன் மோதிக் கொண்டனவாம். இதில் கண்ணனுக்கும், ராஜகோபாலுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதேபோல வியாழக்கிழமையும் அவா்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ராஜகோபாலின் மனைவியும், உறவினா்கள் இருவரும் சோ்ந்து கண்ணனை கீழே தள்ளி கம்பால் தாக்கினராம். இதில் காயமடைந்த கண்ணன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில் ராஜகோபால், அவரது மனைவி தங்கம் (45) மற்றும் அவரது உறவினா்கள் முத்துமணி (40), பாண்டீஸ்வரி (30) ஆகியோா் மீது வழக்குப் பதிந்த கட்டனூா் காவல்துறையினா் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.