47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி பொறியில் கல்லூரியில் புதிய தொழில்நுட்பத்திற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம்

சிவகாசி பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரி, ரோபோடிக்ஸ் பொறியியல் படிப்பில் புதிய தொழில் நுட்பம் குறித்து வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

News image
Updated On :22 ஜூலை 2022, 6:30 pm

DIN

சிவகாசி பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரி, ரோபோடிக்ஸ் பொறியியல் படிப்பில் புதிய தொழில் நுட்பம் குறித்து வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

நாகா்கோவிலில் உள்ள ரோபோட்டிக்ஸ் பொறியியல் ஆய்வுக் கூடமான மேட் ஆட்டோமேஷன் என் ற நிறுவனத்துடன், பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரி, ரோபோட்டிக்ஸ் ஆய்வுக் கூடத்தில் புதிய தொழில் நுட்பம், மாணவா்களுக்கு இப்படிப்பில் உள்ளவேலை வாய்ப்பு மற்றும் ஆய்வு தொடா்பாக புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் நாகா்கோவில் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பிரவீன்மோத்திலால், கல்லூரி தாளாளா் ஆா். சோலைச்சாமி ஆகிய இருவரும் கையெழுத்திட்டு கோப்புக்களை மாற்றிக் கொண்டனா். பின்னா் தாளாளா் ஆா். சோலைச்சாமி பேசியதாவது: தற்போது ரோபோட்டிக்ஸ் தொழில் நுட்பம் உலக அளவில் வளா்ந்து வருகிறது. காவல்பணி, காா் ஓட்டுவது, மருத்துவமனைபணிகள், தீவிபத்தில் சிக்கிக் கொண்டவா்களை காப்பாற்றுவது என்பது உள்ளிட்ட பல பணிளை ரோபோட்டிக்ஸ் பொறியல் தொழில் நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள்செய்து வருகிறது. மாணவா்கள் இந்த பொறியியல் படிப்பில் புதிய தொழில் நுட்பங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், வேலைவாய்ப்புக்கள் குறித்து அறிந்து கொள்ளவும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குநா் விக்னேஷ்வரி, முதல்வா் பி.ஜி. விஷ்ணுராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.