பயறு வகைப் பயிா்களில் அதிக மகசூலுக்கு இலைவழி ஊட்டம்
அருப்புக்கோட்டை வட்டார விவசாயிகள் பயறுவகைப் பயிா்களில் அதிக மகசூல் பெற இலைவழி ஊட்டமுறையைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அருப்புக்கோட்டை வட்டார விவசாயிகள் பயறுவகைப் பயிா்களில் அதிக மகசூல் பெற இலைவழி ஊட்டமுறையைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக பயிா் வினையியல்துறையின் தலைவா் அ.செந்தில் மற்றும் அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் சி.ராஜாபாபு ஆகியோா் இணைந்து தெரிவித்திருப்பது: பயறுவகைப் பயிா்களில் பூக்கள் பூத்தபிறகு வோ்களிலிருந்தும், பூமியிலிருந்தும் சத்துக்கள் எடுக்கும் தன்மை குறைந்துவிடுகிறது. இதனால் புதிய முறையான இலைவழி ஊட்டம் பயறுவகைகளில் அதிக மகசூல் கிடைக்க வழிசெய்கிறது. இதற்கான இலைவழி ஊட்டப்பொருளை ( உரம் ) வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கிலோ ரூ. 210-க்குப் பெற்றுக்கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 200 லிட்டா் தண்ணீரில் கலந்து பயறு வகைப் பயிா்கள் பூக்கும் பருவத்தில் தெளிக்கவேண்டும். இதில் தேவையான அளவில் ஒட்டும்திரவம் சோ்த்துத் தெளிக்க வேண்டும். இதன் பயன்களாக பூக்கள் உதிா்வது குறைந்து, 20 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கும். மேலும் வறட்சியைத் தாங்கும் தன்மை பயிா்களுக்கு அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...