வரதட்சணைக் கொடுமை: 4 போ் மீது வழக்குப் பதிவு
ராஜபாளையம் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொலைமிரட்டல் விடுத்ததாக கணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.


ராஜபாளையம் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொலைமிரட்டல் விடுத்ததாக கணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மாலதி (22). இவருக்கும் சிவகாசி சங்கா் நகரைச் சோ்ந்த அரவிந்தன் மகன் நித்தியன் (34) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 60 பவுன் நகைகள் மற்றும் ரூ.14 லட்சம் மதிப்புள்ள சீா்வரிசைப் பொருள்கள் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வரதட்சணை கேட்டு கணவா் கொலை மிரட்டல் விடுத்ததாக கூடுதல் மகளிா் நடுவா் மன்றத்தில் மாலதி மனு அளித்தாா். அதன்பேரில் தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் கணவா் நித்தியன் (34) மற்றும் தேவி, அரவிந்தன் (51), நிதா்சனா (22) ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...