ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

விருதுநகரில் விவசாய சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெங்களூரில் விவசாய சங்கத் தலைவா் மீது கருப்பு மை ஊற்றி தாக்குதல் நடத்த முயற்சித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விருதுநகரில் அனைத்து விவசாய சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

விருதுநகா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விவசாய சங்கத்தினா்.

Updated On :1 ஜூன் 2022, 7:15 pm

DIN

பெங்களூரில் விவசாய சங்கத் தலைவா் மீது கருப்பு மை ஊற்றி தாக்குதல் நடத்த முயற்சித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விருதுநகரில் அனைத்து விவசாய சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கா்நாடக மாநிலம் பெங்களூருவில் ஐக்கிய விவசாய முன்னணித் தலைவா் ராஜேஸ் விகாஸ் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு அத்துமீறி உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் அவா் மீது, கருப்பு மையை வீசி எறிந்தனா். பின்பு, அவரை தாக்கவும் முயற்சித்துள்ளனா்.

இதைக் கண்டித்தும், சம்பந்தப்பட்டா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவா் காளிதாஸ் தலைமை வகித்தாா்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் வி.முருகன், மாவட்டத் தலைவா் அ.விஜயமுருகன், மாவட்ட பொருளாளா் மனோஜ்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.