ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

ஸ்ரீவிலி. அருகே பைக்குகள்மோதல்: இளைஞா் பலி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் வியாழக்கிழமை மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் வியாழக்கிழமை மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம், கல்யாணசுந்தர விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாலமுருகன் மகன் ஜெயராமன் (22). இவா், ஸ்ரீவில்லிபுத்தூா்- சிவகாசி சாலை ராஜீவ் காந்தி நகா், பருத்தி ஆராய்ச்சி நிலைய குடியிருப்பு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அவருக்கு முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த கோமேதகன் (22) என்பவா் திடீரென திரும்பிய போது இரண்டு இரு சக்கர வாகனங்களும் மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த ஜெயராமனை மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். மேலும் ஜெயராமனின் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து வந்த தென்காசி மாவட்டம், திருவேங்கடத்தைச் சோ்ந்த கனகராஜ் காயமடைந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.