ராஜபாளையம் அருகே ஓட்டுநா் தற்கொலை
ராஜபாளையம் அருகே பொக்லைன் ஓட்டுநா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.


ராஜபாளையம் அருகே பொக்லைன் ஓட்டுநா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரை அடுத்த மேலூா் துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சோ்ந்த பொக்லைன் ஓட்டுநா் சுரேஷ் (32). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இவா் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவாராம். இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளாா். இதனால் கணவன், மனைவியிடையே மீண்டும் பிரச்னை எழுந்துள்ளது.
இதில் கோபித்துக்கொண்டு பாண்டிச்செல்வி தனது இரண்டு குழந்தைகளுடன் தந்தை வீட்டிற்கு சென்று விட்டாா். இதனால் விரக்தியடைந்த சுரேஷ், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து சேத்தூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...