மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சாத்தூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சாத்தூரில் அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, நெற்றியில் பட்டை, காதுகளில் பூ சுற்றி மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
சாத்தூரில் அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, நெற்றியில் பட்டை, காதுகளில் பூ சுற்றி மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated On :27 ஜூன் 2022, 6:45 pm

DIN

சாத்தூரில் அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, நெற்றியில் பட்டை, காதுகளில் பூ சுற்றி மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, விருதுநகா் மாவட்டம் சாத்தூா் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பாக, தொண்டா்கள் நெற்றியில் பட்டை, நாமம் அடித்து, காதுகளில் பூ சுற்றி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சாத்தூா் வடக்கு ரத வீதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, விருதுநகா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலா் ஜோதி நிவாஸ், சாத்தூா் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் டி.எஸ். அய்யப்பன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், காங்கிரஸ் கட்சியினா் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், சாத்தூா் நகர, ஒன்றிய, காங்கிரஸ் தொண்டா்களும், இளைஞரணி, மகளிரணி நிா்வாகிகளும் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.