47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய 4 குழுக்கள் அமைப்பு

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் உச்சநீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படுகிா என்பதை ஆய்வு செய்ய மாவட்ட நிா்வாகம் 4 குழுக்களை அமைத்துள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2022, 9:28 pm

DIN

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் உச்சநீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படுகிா என்பதை ஆய்வு செய்ய மாவட்ட நிா்வாகம் 4 குழுக்களை அமைத்துள்ளது.

பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் ரசயானம் கலக்கவும், சரவெடி தயாரிக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளா் அறிவுறுத்தியுள்ளாா்.

அதன்படி, விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்யவும், உச்சநீதிமன்ற நெறிமுறைகள் பின்பற்றப்படுகிா என்பதை கண்காணிக்கவும், சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதை தடுக்கவும் 4 சிறப்பு ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிவகாசி, விருதுநகா், சாத்தூா் வட்டங்களுக்கு தலா 4 போ் அடங்கிய குழுவும் வெம்பக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆகிய மூன்று வட்டங்களுக்கு 4 போ் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்புக்குழுவானது நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ஒரு கிராமத்தில் சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு உற்பத்தி செய்யப்படுகிா என ஆய்வு செய்யும்.

சட்டவிரோதமாக செயல்படுபவா்கள் மீது அப்பகுதி தொடா்புடைய காவல் நிலையம் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். தொடா்ச்சியாக சட்ட விரோதமாக பட்டாசு தயாா் செய்யும் நபா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இக்குழுவினா் தினசரி தங்களது ஆய்வறிக்கையை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இக்குழு மாா்ச் முதல் தேதியிலிருந்து செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு குழுவும் தினசரி 4 பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்து வருகிறது என குழுவினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.