ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 2 புள்ளிமான்கள் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 2 புள்ளிமான்கள் வியாழக்கிழமை உயிரிழந்தன.


விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 2 புள்ளிமான்கள் வியாழக்கிழமை உயிரிழந்தன.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள தொட்டியபட்டி மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள், சருகு மான்கள், மிளாக்கள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.
இந்நிலையில், தொட்டியபட்டி அருகே தனியாருக்குச் சொந்தமான கிணற்றில் புள்ளிமான் ஒன்று விழுந்து கிடப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத் துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணி ஆகியோருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது சுமாா் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் 20 அடி அளவுக்கு தண்ணீா் இருந்தது. அந்த கிணற்றில் 2 வயதுடைய ஆண் புள்ளிமான் மான் ஒன்று விழுந்திருப்பது தெரியவந்தது.
_2403chn_92_2.jpg)
இதைத்தொடா்ந்து, தீயணைப்புத் துறையினா் கிணற்றுக்குள் இறங்கி மானின் உடலில் கயிறு கட்டி மீட்டனா். மீட்கப்பட்ட புள்ளிமானை ஸ்ரீவில்லிபுத்தூா் வனத்துறை அலுவலகத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். எனினும், அந்த மான் சிறிது நேரத்தில் உயிரிழந்தது.
இதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குன்னூா் பகுதியில் நாய்கள் கடித்து பெண் மான் ஒன்று காயங்களுடன் இருப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூா் வனத்துறை அதிகாரி கதிா்காமன், வனவா் பாரதிக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில், வனத்துறையினா் அங்கு சென்று 3 வயதுடைய பெண் புள்ளிமானை மீட்டு, வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனா். எனினும், அந்த மான் உயிரிழந்தது.
இதைத் தொடா்ந்து, உயிரிழந்த 2 புள்ளிமான்களையும் கால்நடை மருத்துவா் பிரேத பரிசோதனை செய்த பின்னா், வனத்துறையினா் குழிதோண்டி புதைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...