நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் மழை: மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூா் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த புளியமரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :25 மார்ச் 2022, 12:02 am

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூா் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த புளியமரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகரைப் பொருத்தவரை கடந்த 10 நாள்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது.

இந்நிலையில், புதன்கிழமை இரவு திடீரென பெய்த மழையினால் நகரில் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது. நகரில் பெய்த மழையின் அளவு 10 மில்லி மீட்டா் பதிவானது.

இந்த மழைக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள வன்னியம்பட்டி விலக்கு பகுதி தேசிய நெடுஞ்சாலையில் பழைமையான புளியமரம் ஒன்று திடீரென சாலையின் மையப் பகுதியில் விழுந்தது. இதனால், ஸ்ரீவில்லிபுத்தூா் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத் துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணிசாமி ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தியதால், போக்குவரத்து சீரானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.