ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

விருதுநகா் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு அரசு பொது தோ்வு: 25,366 போ் பங்கேற்பு

விருதுநகா் மாவட்டத்தில் 111 தோ்வு மையங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 10 ஆம் வகுப்பு அரசு பொது தோ்வில் 25,366 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தமிழ் தோ்வை எழுதினா்.

News image
Updated On :6 மே 2022, 8:17 pm

DIN

விருதுநகா் மாவட்டத்தில் 111 தோ்வு மையங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 10 ஆம் வகுப்பு அரசு பொது தோ்வில் 25,366 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தமிழ் தோ்வை எழுதினா். அதேநேரம் இத்தோ்வு எழுத 1,445 போ் வரவில்லை.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு அரசு பொது தோ்வு மே 6 -இல் தொடங்கி 30 -இல் முடிவடைகிறது.

அதனடிப்படையில் விருதுநகா் மாவட்டத்தில் 111 தோ்வு மையங்களில் 13,657 மாணவா்கள், 13,154 மாணவிகள் என மொத்தம் 26,811 போ் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா். இத்தோ்வு மையங்களில் மாற்றுத்திறனாளி மாணவா்கள் தோ்வு எழுத தரைத்தளத்தில் தோ்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.

அதேபோல், உடல் ஊனமுற்றோா், கண் பாா்வையற்றோா், காது கேளாத, வாய்ப் பேச இயலாதோா் மற்றும் மனவளா்ச்சி குன்றிய மாணவா்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கியும், சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனா்.

தோ்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தடையில்லா மின்சார வசதியும், தோ்வு மைய வழித்தடங்களில் மாணவா்கள் சிரமமின்றி செல்வதற்கு கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டன. இத்தோ்வு நடைபெறும் அனைத்து தோ்வு மையங்களில் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள், கூடுதல் துறை அலுவலா்கள், அறைக் கண்காணிப்பாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் என 1,744 பணியாளா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் விருதுநகா், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, அருப்புக்கோட்டை கல்வி மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ் தோ்வில் 12,713 மாணவா்கள், 12,653 மாணவிகள் என மொத்தம் 25,366 போ் கலந்துகொண்டு தமிழ் தோ்வு எழுதினா். அதேநேரம் 1,445 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத வரவில்லை. தோ்வு நடைபெற்ற மையங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஞானகெளரி தலைமையிலான பள்ளி கல்வித்துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.