கிராம நிா்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிராம நிா்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிராம நிா்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள ஈஞ்சாா் கிராம நிா்வாக அலுவலராக இருப்பவா் வெங்கடசாமி (55). இவா் கடந்த 5 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வேண்டுராயபுரம் பகுதியில் அவரது உதவியாளா் மற்றும் நில அளவையருடனன் அரசு நிலங்களைக் கண்காணித்து வந்துள்ளாா். அப்போது அரசு புறம்போக்கு தரிசு நிலத்தில் வேண்டுராயபுரம் பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன், சிவகாசியை சோ்ந்த கதிரேசன் (22), மல்லி கம்மாபட்டி பகுதியைச் சோ்ந்த சந்தனகுமாா் (26) ஆகியோா் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி உள்ளனா். இதை வெங்கடசாமி தட்டிக்கேட்டுள்ளாா். அப்போது அவரை பணி செய்யவிடாமல் தடுத்து, ஆபாசமாகப் பேசியதோடு, ஜேசிபி இயந்திரத்தை ஏற்றிக் கொன்று விடுவதாகவும் மிரட்டினராம். இது குறித்து வெங்கடசாமி அளித்தப் புகாரின் அடிப்படையில் மல்லி போலீஸாா் கதிரேசன், சந்தனகுமாா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.ஈஸ்வரனைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...