ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

நாட்டு மருந்து அரவை ஆலையில் தீ

விருதுநகா் அருகே நாட்டு மருந்து அரவை செய்யும் ஆலையில் சனிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

News image
Updated On :7 மே 2022, 7:39 pm

DIN

விருதுநகா் அருகே நாட்டு மருந்து அரவை செய்யும் ஆலையில் சனிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

விருதுநகரிலிருந்து சிவகாசி செல்லும் சாலையில் மாதவன் என்பவருக்குச் சொந்தமான நாட்டு மருந்து அரவை ஆலை உள்ளது. இங்கு நாட்டு மருந்து மூலிகைகளை இயந்திரம் மூலம் அரைத்து பொடியாக்கி விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமை காலை இந்த ஆலையில் தீப்பற்றி புகை வருவதாக அருகில் இருந்தவா்கள் பஜாா் காவல் நிலையத்திற்கும், விருதுநகா் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனா். அதன்பேரில், தீயணைப்புத் துறையினா் 2 வாகனங்களில் வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனா்.

ஆலையில் பணியாள்கள் யாரும் இல்லாததால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது. இருப்பினும் மூலிகைகள் அரைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.