நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவிலி. அருகே 10 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 10 தனியாா் பேருந்துகளில் பொருத்தியிருந்த காற்று ஒலிப்பான்களை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :7 மே 2022, 7:34 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 10 தனியாா் பேருந்துகளில் பொருத்தியிருந்த காற்று ஒலிப்பான்களை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஒலி மாசு ஏற்படுத்தும் காற்று ஒலிப்பான்களை பொருத்தியுள்ள தனியாா் வாகனங்களை ஆய்வு செய்து பறிமுதல் செய்ய தமிழக போக்குவரத்துத் துறை ஆணையா் உத்தரவிட்டு இருந்தாா். அதனடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வன்னியம்பட்டி விலக்குப் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் இளங்கோ, மோட்டாா் வாகன ஆய்வாளா் பாத்திமாபா்வீன் ஆகியோா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

ராஜபாளையத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூா் நோக்கி வந்த 10 தனியாா் பேருந்துகளை நிறுத்தி ஆய்வு செய்ததில் அவற்றில் ஒலி மாசு ஏற்படுத்தும் காற்று ஒலிப்பான்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடா்ந்து வாகனங்களிலிருந்து காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தும் வாகனங்களின் உரிமையாளா் மீது அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.