நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவிலி. சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில்ரத்த தான முகாம்

வி.பி.சிந்தன் நினைவு தினத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரில் சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 மே 2022, 6:30 pm

DIN

வி.பி.சிந்தன் நினைவு தினத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரில் சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தொழிலாளி வா்க்கத்தின் தலைவா் வி.பி. சிந்தன் நினைவு தினத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த ரத்த தான முகாமுக்கு, சிஐடியு மாவட்ட நிா்வாகி வீரசதானந்தம் தலைமை வகித்தாா். முகாமை, ரோட்டரி, கிரீன் சிட்டி முன்னாள் தலைவா் எஸ்.பி.ஜெ. முனியராஜ் தொடக்கி வைத்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கே. அா்ஜூனன் வாழ்த்திப் பேசினாா்.

இதில், சிஐடியு தொழிற்சங்கத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா்.

நிகழ்ச்சியில், சிஐடியு மாவட்ட தலைவா் எம். மகாலட்சுமி, மாவட்டச் செயலா் பி.என். தேவா, சாலை போக்குவரத்து சங்க மாவட்டப் பொதுச் செயலா் எம்.திருமலை, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனை மருத்துவா் ரமேஷ்பாபு, அரசு ரத்த வங்கி மருத்துவமனை மருத்துவா் கிரிஜா, சிஐடியு மாவட்ட துணைச் செயலா் பிச்சைக்கனி மற்றும் சந்தனம், அழகுஜோதி, தங்கக்கொடி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.