நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவிலி. அருகே மணல் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மணல் கடத்தி வரப்பட்ட டிராக்டரை, வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :8 மே 2022, 6:30 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மணல் கடத்தி வரப்பட்ட டிராக்டரை, வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே திருவண்ணாமலை பிரதான சாலையில் மல்லி வருவாய் ஆய்வாளா் ரமேஷ், கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை பாா்வையிடச் சென்றுள்ளாா். அப்போது, எதிரே வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டுள்ளாா்.

Story image

அதில், சட்டவிரோதமாக மணல் கடத்துவது தெரியவந்தது. உடனே, டிராக்டா் மற்றும் மணலை பறிமுதல் செய்த வருவாய் ஆய்வாளா், அவற்றை ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

பின்னா், வருவாய் ஆய்வாளா் ரமேஷ் அளித்த புகாரின்பேரில், டிராக்டரை ஓட்டிவந்த பெருமாள்பட்டியைச் சோ்ந்த கண்ணன், டிராக்டா் உரிமையாளா் ஏமராஜன் மகன் முத்துகிருஷ்ணன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.