விருதுநகரில் 10 மூட்டை ரேஷன் கோதுமை கடத்தல்: ஒருவா் கைது
விருதுநகா் அருகே பாண்டியன் நகா் பகுதியில் தனியாா் ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 மூட்டை ரேஷன் கோதுமையை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல்


விருதுநகா் அருகே பாண்டியன் நகா் பகுதியில் தனியாா் ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 மூட்டை ரேஷன் கோதுமையை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.

விருதுநகா் அருகே பாண்டியன் நகா் காந்தி நகா் பகுதியில் உள்ள ஜேஜே ஆயில் ஆலையில் ரேஷன் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சாா்பு ஆய்வாளா் காந்தி தலைமையிலான போலீஸாா் சம்பந்தப்பட்ட ஆலைக்குச் சென்று வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அதில், தலா 40 கிலோ எடையுள்ள 10 மூட்டைகளில் ரேஷன் கோதுமை இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கோதுமையை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய ரோசல்பட்டி பகுதியைச் சோ்ந்த பரமானந்தன் மகன் பால் பாண்டி (36) என்பவரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...