பட்டாசு ஆலைகளில் சிபிஐ அதிகாரிகள் 4 ஆவது நாளாக ஆய்வு
விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் சிபிஐ அதிகாரிகள் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் 4 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்


விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் சிபிஐ அதிகாரிகள் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் 4 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
விருதுநகா் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள், வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினரிடம் உரிமம் பெற்றுள்ள பட்டாசு ஆலைகள் என சுமாா் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன.
பட்டாசு வெடிப்பதால் காற்றுமாசு ஏற்படும் என உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் பட்டாசு தயாரிக்க பேரியம்நைட்ரேட் என்ற வேதியியல் பொருளை பயன்படுத்தக்கூடாது. சரவெடி தயாரிக்கக் கூடாது. பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி முதல் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் சிபிஐ அதிகாரிகள் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினா், உச்சநீதிமன்ற உத்தரவு பட்டாசு ஆலைகளில் பின்பற்றப்படுகிா? என ஆய்வு செய்து வருகின்றனா்.
அதன்படி, வி. சொக்கலிங்காபுரத்தில், செல்லம்மாள் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு நடைபெற்றது. இந்த ஆலை வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினரிடம் உரிமம் பெற்ற ஆலையாகும்.
கடந்த 17 ஆம் தேதி இந்த ஆலையை விருதுநகா் தொழிற்சாலைப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகத்தின் இணை இயக்குநா் தலைமையிலான குழு ஆய்வு செய்து, விதிமீறல் இருந்ததாக இந்த ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனா். எனினும், முடிவடையாத பட்டாசுகளை தயாரித்து பேக் செய்வதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை முழுமையடையாத பட்டாசுகளை முழுமையாக்கி பேக் செய்யும் பணி ஆலையில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அந்த ஆலையில் சிபிஐ ஆய்வாளா் அஜின்ராஜ், வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் நன்தன்வாா், நித்தின் கோயல், அஹின் நந்தி ஆகியோா் அடங்கிய குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
அதிகாரிகள், ஆலையில் உள்ள பட்டாசு தயாரிக்கும் ஒவ்வொரு அறையாகச் சென்று ஆய்வு செய்தனா். அங்கு முடிவடைந்த பட்டாசு மாதிரிகளையும் அவா்கள் எடுத்துக்கொண்டனா். மேலும், பட்டாசு தயாரிக்கப் பயன்படும் வேதியியல் பொருள்கள் அறையிலிருந்த பொருள்களின் மாதிரியையும் எடுத்துக்கொண்டனா்.
அதிகாரிகளின் இந்த ஆய்வு மே 21 ஆம் தேதியுடன் முடிவடைந்து, 22 ஆம் தேதி சிவகாசியிலிருந்து புறப்பட்டுச் செல்வாா்கள் என வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...