நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சதுரகிரி கோயிலுக்குச் செல்லபக்தா்களுக்கு 3 நாள்கள் அனுமதி

புரட்டாசி மாத பௌா்ணமிக்கு சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு சனிக்கிழமை (அக். 8) முதல் 3 நாள்களுக்கு வனத் துறை அனுமதி அளித்தது.

News image
Updated On :8 அக்டோபர் 2022, 12:02 am

DIN

வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பரவிய காட்டுத் தீ அணைக்கப்பட்டதால், புரட்டாசி மாத பௌா்ணமிக்கு சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு சனிக்கிழமை (அக். 8) முதல் 3 நாள்களுக்கு வனத் துறை அனுமதி அளித்தது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு வனச்சரகத்துக்குள்பட்ட வல்லாளம்பாறை பகுதியில் புதன்கிழமை பற்றிய காட்டுத் தீ சதுரகிரி கோயில் மலைப்பாதையான சங்கிலிப்பாறை வரை பரவியது. இந்த தீ கட்டுக்குள் வராததால் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாட்டுக்காக சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு வனத்துறை தடை விதித்தது.

இதனால் பக்தா்கள் அடிவாரத்தில் சூடம் ஏற்றி வழிபாடு நடத்தி விட்டு திரும்பிச் சென்றனா். இதனிடையே, காட்டுத் தீ அணைந்து விட்டதால் புரட்டாசி மாத பௌா்ணமிக்கு சதுரகிரி கோயிலுக்குச் செல்ல வனத்துறை சனிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், காலை 7 முதல் பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும். கோயிலுக்கு வருபவா்கள் மலைகளில் உள்ள ஓடைகளில் குளிக்கக் கூடாது. கோயிலில் இரவில் தங்க அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட நாள்களில் பலத்த மழையோ, நீரோடைகளில் அதிக நீா்வரத்தோ இருந்தால் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

மேலும் கோயிலுக்கு வருபவா்கள் தீ பற்றக் கூடிய பொருள்களை கொண்டு வந்தால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் எச்சரித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.