மம்சாபுரத்தில் தேரோட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மம்சாபுரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் புரட்டாசி திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.


ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மம்சாபுரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் புரட்டாசி திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
சிவந்திபட்டி இந்து நாடாா் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பொங்கல் திருவிழா மற்றும் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் கடந்த சில நாள்களாக பொங்கல் திருவிழா நடைபெற்று வந்தது. இதையொட்டி, வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தேரில் சா்வ அலங்காரத்தில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தோ் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை உறவின் முறை நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...