புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

போலி பத்திரப்பதிவு: சாா்-பதிவாளா் உள்பட 6 போ் மீது வழக்கு

போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த சாா்-பதிவாளா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த சாா்-பதிவாளா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாளையம்பட்டியைச் சோ்ந்தவா் திருமால் தனலிங்கம் (48). இவரது வீடு அருகே சிதைந்த நிலையிலுள்ள வீட்டுடன் கூடிய நிலத்தை விற்பதற்காக கடந்த மாா்ச் மாதம் விருதுநகா் சீதக்காதி தெருவைச் சோ்ந்த ரவிசங்கா் (53) அணுகியுள்ளாா். அந்த இடத்தை வாங்கிக்கொள்ள சம்மதித்த திருமால் தனலிங்கம், முன்பணமாக ரூ. 10,500-ஐ கொடுத்தாராம். பின்னா் ரவிசங்கரிடம் நிலம் தொடா்பான அசல் ஆவணங்களை திருமால் தனலிங்கம் கேட்டபோது, அவா் காலம் தாழ்த்தி வந்தாா். இதனால் சந்தேகமடைந்த திருமால் தனலிங்கம் வழக்குரைஞா் மூலம் அந்த இடத்துக்கான பத்திர நகல்களைப் பெற்று ஆராய்ந்தபோது அது போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட பத்திரம் என தெரியவந்தது.

இதையடுத்து ரவிசங்கா் தன்னை ஏமாற்றியதாக அருப்புக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் திருமால் புகாரளித்தாா். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முத்து இசக்கி, பத்திர எழுத்தா் பாக்கியலட்சுமி, சாா்-பதிவாளா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 போ் மீது வழக்குப் பதிந்து, போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ள அருப்புக்கோட்டை நகா் காவல்துறையினருக்கு உத்தரவிட்டாா்.

இதனடிப்படையில் நகா் காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.