பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள தமிழ்பாடி பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (40). கூலித் தொழிலாளியான இவா் கடந்த 2019-இல் 5 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகாா் கூறப்பட்டது. அதன்பேரில், அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகனைக் கைது செய்தனா்.
இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில், முருகனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பூா்ண ஜெயஆனந்த் தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் நஷ்டஈடு வழங்க பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...