கிராம நிா்வாக அலுவலா்களுக்கு வேளாண்மை கணக்கெடுப்பு பயிற்சி
ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய வேளாண் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து கிராம நிா்வாக அலுவலா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.


ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய வேளாண் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து கிராம நிா்வாக அலுவலா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்திய வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகம் சாா்பில் விவசாயிகளுக்கான வேளாண் வளா்ச்சித் திட்டங்களுக்காக நாடு முழுவதும் 11ஆவது வேளாண் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் நோபிள் ஆப் மூலம் சேகரிக்கப்படுகின்றன.
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் வட்டாட்சியா் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநா் சங்கரவேல் பாண்டியன் கணக்கெடுப்பு குறித்து அலுவலா்களுக்குப் பயிற்சி அளித்தாா். இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் தாலுகாவைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் வருவாய்த்துறையினா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...