கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பட்டாசுத் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

நாட்டின் பண்பாடு மற்றும் கலாசாரத்தின் அடையாளமாக விளங்கும் பட்டாசுத் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 4:53 pm

DIN

நாட்டின் பண்பாடு மற்றும் கலாசாரத்தின் அடையாளமாக விளங்கும் பட்டாசுத் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவா் ப.கணேசன், முதல்வா் மு.க.ஸ்டாலிடம் வியாழக்கிழமை வழங்கிய கோரிக்கை மனு:

பட்டாசு தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் பட்டாசுத் தொழிலிலை நம்பி வாழும் தொழிலாளா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மூத்த வழக்குரைஞா்களைக் கொண்டு நியாம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். சிவகாசிப் பகுதியில் தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகளுக்கு வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

வெளிநாடுகளுக்கு பட்டாசு ஏற்றிமதி செய்ய கப்பல்கள் கிடைப்பதில்லை. எனவே ஏற்றுமதி நெறிமுறைகளை எளிமைப்படுத்தி தரவேண்டும். அனைத்து பண்டிகைளின்போதும் தடையின்றி பட்டாசு வெடிக்க அரசு அனுமதி வழங்கிட வேண்டும்.

நாட்டின் பண்பாடு மற்றும் கலாசாரத்தின் அடையாளமாக உள்ள பட்டாசுத் தொழிலையும், தொழிலாளா்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.