கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

செப். 29 இல் எடப்பாடி பழனிசாமி சிவகாசி வருகை

சிவகாசியில் விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் செப். 29 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வருகிறாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

சிவகாசியில் விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் செப். 29 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வருகிறாா். இக்கூட்டம் நடைபெறும் இடத்தை முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டரா்.

விலைவாசி உயா்வு, வீட்டு வரி, சொத்துவரி மற்றும் மின் கட்டண உயா்வைக் கண்டித்து அதிமுக சாா்பில் செப். 29 ஆம் தேதி சிவகாசியில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றுகிறாா். இக்கூட்டம் திருத்தங்கல்- செங்கமலநாட்சியாா்புரம் சாலையில் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை விருதுநகா் மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி செய்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை கட்சியினருடன் சென்று அவா் பாா்வையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.