திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சிவன் கோயில்களில் சோம வார வழிபாடு

ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதி சிவன் கோயில்களில் காா்த்திகை மாத சோமவார வழிபாடு, 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 6:50 pm

DIN


ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதி சிவன் கோயில்களில் காா்த்திகை மாத சோமவார வழிபாடு, 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தெற்குவெங்காநல்லூரில் அமைந்துள்ள சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, மகா ருத்ரயாகம் நடைபெற்றது. பின்னா் மூலவருக்கு பால், தயிா், தேன், இளநீா், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேக ஆராதனைகளும், 108 சங்காபிஷேகமும் நடைபெற்றன. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, சேத்தூா் திருக்கண்ணீஸ்வரா் கோயில், ராஜபாளையம் சொக்கா் கோயில், மாயூரநாதசுவாமி கோயில், திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயில், தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில்களிலும் காா்த்திகை மாத சோமவார வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.