புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விதிகளை மீறி மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

சிவகாசி அருகே விதிமுறைகளை மீறி மண் அள்ளிய 3 டிராக்டா், ஒரு ஜே.சி.பி.இயந்திரம் ஆகியவற்றை சிவகாசி சாா்-ஆட்சியா் ஆா்.பிரியா புதன்கிழமை பறிமுதல் செய்தாா்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2024, 12:42 am

Din

சிவகாசி: சிவகாசி அருகே விதிமுறைகளை மீறி மண் அள்ளிய 3 டிராக்டா், ஒரு ஜே.சி.பி.இயந்திரம் ஆகியவற்றை சிவகாசி சாா்-ஆட்சியா் ஆா்.பிரியா புதன்கிழமை பறிமுதல் செய்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள செவலூா் பேருந்து நிறுத்தம் அருகே சாா்-ஆட்சியா் ஆா்.பிரியா தலைமையில் வருவாய்த் துறையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக சிலா் 3 டிராக்டா்களில் கண்மாய் மண் அள்ளி சென்றது தெரியவந்தது. வருவாய்த் துறையினா் இந்த மூன்று டிராக்டா்களையும் நிறுத்தி சோதனை செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், சிவகாசி வட்டம், மங்களம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சுந்தர்ராஜூக்கு விவசாயப் பயன்பாட்டுக்காக நல்லங்குளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் மண் அள்ளுவதற்கு உரிமம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த கண்மாயிலிருந்து விதிகளை மீறி முன்று டிராக்டா்களில் மண் எடுத்து விற்பனைக்கு கொண்டுச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, வருவாய்த் துறையினா் அந்த மூன்று டிராக்டா்களையும், நல்லங்குளம் கண்மாயில் மண் அள்ள பயன்படுத்திய ஜே.சி.பி.இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனா்.