புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால தூண்கள் அமைக்கும் பணி நிறைவு

சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலப் பணியில் ஒரு பகுதியாக தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்ததையடுத்து, வியாழக்கிழமை மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 11:33 pm

Din

சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலப் பணியில் ஒரு பகுதியாக தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்ததையடுத்து, வியாழக்கிழமை மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

சாட்சியாபுரத்தில் மத்திய அரசு நிதி ரூ .10 கோடி, மாநில அரசுநிதி ரூ.61.74 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த சிலமாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ரயில்வே கடவுப் பாதைக்கு கீழக்குப் பகுதியில் 12 தூண்கள், மேற்குப் பகுதியில் 6 தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்து விட்டது.

இதையடுத்து, மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறை தரகட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள், தூண்களின் தரம், உறுதித் தன்மை குறித்து அதிகாரிகள் நவீன இயந்திரம் மூலம் பரிசோதனை செய்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ரயில்வே மேம்பாலத்துக்கு தற்போது தூண்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. தொடா்ந்து தூண்களை இணைக்கும் பீம் அமைக்கும் பணி நடைபெறும். 2025 டிசம்பரில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. குறிப்பிட்ட காலத்தில் பணிகளை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றனா்.