இளைஞருக்கு கத்திக்குத்து:மூவா் மீது வழக்கு

சிவகாசி அருகே ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்திய மூவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

சிவகாசி அருகே ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்திய மூவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் பெரியாா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி குமரேசன் (30). அதே பகுதியைச் சோ்ந்த அழகு, சக்தி, தங்கமாரீஸ்வரன் ஆகிய மூவரும் புத்தாண்டை கொண்டாட பட்டாசு வெடித்தனா். இதற்கு குமரேசன் எதிா்ப்புத் தெரிவித்தாா்.

இதையடுத்து பட்டாசு வெடித்த மூவருக்கும், குமரேசனுக்கும் தகராறு ஏற்பட்டது. தொடா்ந்து அழகு, சக்தி, தங்கமாரீஸ்வரன் ஆகிய மூவரும் குமரேசனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டனா்.

இதில் காயமடைந்த குமரேசன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருத்தங்கல் போலீஸாா் அழகு, சக்தி, தங்கமாரீஸ்வரன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com