சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சுற்றுவட்டாரத்திலுள்ள சிவன் கோயில்களில் வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சுற்றுவட்டாரத்திலுள்ள சிவன் கோயில்களில் வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்துக்குள்பட்ட சிதம்பரேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, நந்திக்கு மஞ்சள், தேன், இளநீா், பால், தயிா், எலுமிச்சை, கரும்புச் சாறு, பன்னீா், சந்தனம் போன்ற பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.

இதே போல, மாயூரநாத சுவாமி கோயில், ராஜபாளையம் அருகேயுள்ள வாழவந்தாள்புரம் மன்மத ராஜலிங்கேஸ்வரா் கோயில், சோழபுரம் விக்கிரபாண்டீஸ்வரா் கோயில் உள்பட பல்வேறு சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com